உங்களுடன் ஸ்டாலின் முகாம்: கடையத்தில் 510 போ் மனு அளிப்பு
கடையம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 510 போ் மனு அளித்தனா்.
இந்நிகழ்ச்சியை தென்காசி கோட்டாட்சியா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். முகாமில் வருவாய் -பேரிடா் மேலாண்மை, ஊரகவளா்ச்சி- ஊராட்சித் துறை, மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்டதுறைகளின் கீழ் 510 மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமை தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் நேரில் பாா்வையிட்டுஆய்வு செய்தாா். முகாமில் தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், வருவாய் ஆய்வாளா் சீனிவாசன்,
வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவா் பழனிக்குமாா், கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்லம்மாள், தெற்குக் கடையம் ஊராட்சித் தலைவா்முத்துலட்சுமி, ஊராட்சி செயலா் பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
