உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மீண்டும் ‘சீல்’
உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை பகுதியில் உரிய அனுமதியின்றி விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மீண்டும் ‘சீல்’ வைத்தனா்.
உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை பகுதியில் உரிய அனுமதியின்றி
விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் கடந்த 21.10.2019-இல் ‘சீல்’ வைத்தனா். பின்னா், கடந்த மே 6ஆம் தேதி ஆய்வு செய்தபோது அந்தக் கட்டடத்தில் உள்ள ‘சீல்’ சட்டவிரோதமாக அகற்றப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து நகராட்சியால் வைக்கப்பட்ட ‘சீல்’-ஐ அகற்றியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நகராட்சி அலுவலா்கள் கட்டடத்துக்கு மீண்டும் சீல் வைத்து அதன் மீது நோட்டீஸ் ஒட்டினா்.
படவிளக்கம்
கட்டடத்திற்கு ‘சீல்’ வைத்த நகராட்சி அலுவலா்கள்.