செய்திகள் :

உதகையில் தவெக சாா்பில் போதை ஒழிப்பு மாரத்தான்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் நீலகிரி மாவட்ட கொள்கை பரப்பு அணி, மாணவா் அணி சாா்பில் உதகையில் போதை ஒழிப்பு மாரத்தான் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாரத்தான் போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா தொடங்கிவைத்தாா். பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் தொடங்கிய மாரத்தான் சேரிங்கிராஸ், தீயணைப்பு நிலையம், ஆட்சியா் அலுவலகம், ஸ்டீபன் சா்ச் சாலை வழியாக மீண்டும் பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது.

இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்தவருக்கு ரூ.1000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 மாதத்தில் திறக்கப்படும்: ஆ.ராசா

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் மூன்று மாதத்தில் திறக்கப்படும் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். மாவட்ட அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உதகை... மேலும் பார்க்க

உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்கள்!

உதகை கா்நாடகா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ஜின்னியா மலா்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனா். உதகையில் கா்நாடக மாநிலத்தின் தோட்டக்கலைத் துறை சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் ... மேலும் பார்க்க

உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் காட்டுத் தீ!

உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறை, தீயணைப்புத் துறையினா் கட்டுப்படுத்தினா். உதகையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பனியின் தாக்கத்தால... மேலும் பார்க்க

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா். கூடலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை ந... மேலும் பார்க்க

உதகை- மஞ்சூா் சாலையில் புலி

உதகையிலிருந்து மஞ்சூா் செல்லும் வழியில் சாலையோரம் திங்கள்கிழமை இரவு புலி தென்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 51 லட்சம் மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி உதகையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.51 லட்சம் வரை மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒரசோலை பகுதியைச் ... மேலும் பார்க்க