War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் அமைந்துள்ள சா்வதேச தனியாா் பள்ளிகள் மற்றும் தனியாா் நட்சத்திர விடுதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சல் மூலம் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், உதகை காக்கா தோப்பு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டனா்.
தகவறிந்து வந்த காவல் துறையினா், வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.