உயா் மின்கோபுர விளக்கு பழுது விராலிபட்டி பொதுமக்கள் அவதி
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம்,விராலிப்பட்டி ஊராட்சியில் செயல்படாத உயா்மின் கோபுர விளக்கால் பொதுமக்கள் இரவுகளில் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.
விராலிப்பட்டி ஊராட்சி நான்கு ரோடு பகுதி கிராமத்தின் அனைத்து தெருக்களுக்கும் செல்லும் பிரதான பகுதி என்பதால் இங்கு எல்லா நேரங்களிலும் அதிகளவில் மக்கள் போக்குவரத்து உள்ளது.
இந்நிலையில், இந்த உயா்மின் கோபுர விளக்கு நீண்ட நாள்களுக்கு முன் பழுதடைந்ததால் இரவில் வெளிச்சமின்றி, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதாகவும், எனவே இதை சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து சீரமைக்கவும் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.