இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
உ.பி. : மாணவியர் விடுதியில் தீ விபத்து; சிறுமி காயம்
கிரேட்டர் நொய்டாவில் மாணவியர் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிறுமி காயமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பெண்கள் விடுதியில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்துக்கு வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் சிறுமி ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார். தீயணைப்பு அதிகாரி கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டவுடன், கட்டடம் முழுவதும் புகை பரவியது. இதனால் மாணவிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது என்றார்.
காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத்: ஏப்ரல் 19-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இதுதொடர்பான விடியோ இணையத்தில் பரவி வருகிறது. அன்னபூரணா பெண்கள் விடுதியில் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஏசி கம்ப்ரசர் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நொய்டா தலைமை தீயணைப்பு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.