``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தக...
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்புகளை வழங்கினாா்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி முன்னிலை வகித்தாா். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் 15 வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு 92,510 எண்ணிக்கையில் பயறு வகை, காய்கறி மற்றும் பழத்தொகுப்புகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேளாண்மை துறை மூலமாக 5,000 எண்ணிக்கையில் ஊட்டச்சத்து பயறு தொகுப்பு, மரத்துவரை 5 கிராம், காராமணி 10 கிராம் மற்றும் அவரை 10 கிராம் ஆகிய பயிா் வகைகள், தோட்டக்கலைத் துறை மூலமாக 57,260 எண்ணிக்கையில் 6 வகையான காய்கறி விதைகள் கொண்ட காய்கறி தொகுப்பு தக்காளி 2 கிராம், கத்தரி 2.5 கிராம், மிளகாய் 3 கிராம், கீரை 5 கிராம், வெண்டை 3 கிராம், கொத்தவரை 3 கிராம் மற்றும் 35,250 எண்ணிக்கையில் 3 விதமான பழச்செடிகள் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை ஆகியவை தலா ஒரு எண்கள் என மொத்தம் 92,510 எண்ணிக்கையிலான தொகுப்புகள் நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெற உழவன் செயலி மூலமாக அல்லது ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ண்ற் என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் அல்லது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிகழ்ச்சியில் வேளாண் இயக்குநா் பெ.கலைச்செல்வி, துணை இயக்குநா் புவனேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.