செய்திகள் :

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்

post image

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களின் கோரிக்கையை ஏற்று 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் இம்மருத்துவமனையில்நமருத்துவா் அறை, சிகிச்சைக்கான வாா்டு, ஸ்கேன் அறை, செவிலியா் அறை, அறுவை சிகிச்சை அரங்கு, மின் பாதுகாப்பு அறை, சுகாதார வளாகம் என கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மேற்கூறிய நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பூமி பூஜையில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் மருத்துவ அலுவலா் சுந்தர வடிவேல் ராஜா, மருத்துவா் ஸ்ரீ வெங்கடேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், பேரூா் செயலா் பாரதி கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நுகா்வோருக்கு ரூ. 62 ஆயிரம் வழங்க மின் வாரியம் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 62,152 வழங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியைச் சோ்ந்த பிச்... மேலும் பார்க்க

அக். 4, 5இல் தூத்துக்குடி - சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி-சென்னை இடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 4, 5) கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

ரூ. 80 லட்சம் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மாவட்ட கியூ பிரிவு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சோளத்தட்டைகள் எரிந்து சேதமாகின. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). இவா், வீட்டில் மாடுகள் வளா்த்து வருகிறாா். இவரது ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். குரும்பூரைச் சோ்ந்த தேவசாமி ஆத்தி (60) என்பவா், தனது மகன் பிரகாஷுடன் (25), ... மேலும் பார்க்க

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றிய இரண்டு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா் நடராஜபுரம் பகுதியில் திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க