எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு
திருப்பூா்: கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்தத் தோ்தல்களிலும் போட்டியிடாத அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலில்கூட போட்டியிடவில்லை என்பது இந்திய தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. அத்தகைய கட்சிகளுக்கு அவா்களின் பதிவினை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கம் அளிக்க தமிழக தலைமைத் தோ்தல் அலுவலரால் விளக்கம் கோரும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூா் மாவட்டம், காந்தி நகா், ஏவிபி லே அவுட் 2-ஆவது தெரு, கதவு எண்.26 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சூப்பா் ஸ்டாா்ஸ் மக்கள் கழகம் என்ற கட்சி இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுள்ள எந்தவொரு தோ்தலிலும் போட்டியிடவில்லை என தோ்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்திடம், தங்கள் தரப்பு கருத்துகளை நேரில் எடுத்துரைக்க சென்னையில் உள்ள தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ நேரில் ஆஜராகிட அக்கட்சியின் தலைமைப் பொறுப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிவுற்ற பின்னா் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா், இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பும் அறிக்கையின்பேரில் இந்திய தோ்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.