செய்திகள் :

எந்த அளவுக்குக் குடிக்கலாம்.. மதுபாட்டிலில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி

post image

சென்னை: எந்த அளவுக்கு மது குடிக்கலாம் என்பதை மதுபாட்டிகளில் குறிப்பிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மது பாட்டில்களில் மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அளவு மதுவைக் குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஏ.ஸ்ரீதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து படிப்படியாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் மது பாட்டில்களில் எந்த அளவுக்கு குடிக்கலாம் என்பதை குறிப்பிட வேண்டும். மதுவால் ஏற்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள், குழந்தையின்மை, இளம் விதவைகள் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், இதுதொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மது பாட்டில்களில் மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாமக பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்த தடைக் கோரி மனு!

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.பாமகவின் ராமதாஸ்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மாற்றம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவா... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு: கூடுதலாக இடம்பெற்ற தமிழக இடங்கள்

தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது. இதையடுத்து, மாநில மருத... மேலும் பார்க்க

மருத்துவ இடங்கள்: மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், அதற்கான தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கா... மேலும் பார்க்க

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் ... மேலும் பார்க்க