எம்பிபிஎஸ் புதுவை மாநில தர வரிசை பட்டியல் வெளியீடு
நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுவை மாநில எம்பிபிஎஸ் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களுக்காக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஜி. பிரசாந்த் 640 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஸ்ரீகான் கொடக்காட்டில் சீராக் 632 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஆா். ஜெகன்னிவாசன் 629 மதிப்பெண் எடுத்து பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.