செய்திகள் :

எம்புரான்: ``முல்லைப் பெரியாறு குறித்த பொய் காட்சிகளை நீக்குக" - கம்பத்தில் விவசாயிகள் போராட்டம்

post image

அண்மையில் நடிகர் மோகன்லால் நடிப்பில், இயக்குநர் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது.

இத் திரைப்படத்தில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், அணைக்கு எதிரான காட்சிகளை நீக்காவிடில், திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனர் கோபாலனை கண்டித்து அந்த நிறுவனங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

முல்லைப்பெரியாறு அணை - எம்புரான்

அதன்படி இன்று காலை கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் திரண்ட விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக காந்திசிலை அருகே உள்ள கோகுலம் சிட்பண்ட்ஸ் அலுவலகம் நோக்கி வந்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் காந்திசிலை அருகே போராட்டத்தை நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம்,

''அணை உடையாது வலுவாக இருக்கிறது என உச்சநீதிமன்றமே பலமுறை தெளிவுபடுத்திவிட்டது. ஆனால் எம்புரான் படத்தில் அணை உடையும் மக்களுக்கு ஆபத்து என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதுபோல பல இடங்களில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் தான். அவர் தமிழகத்தில் பல கிளைகளை நடத்தி வருகிறார். இந்தக் கிளைகளில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனமாக உள்ளது.

போராட்டம்

ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலன், தமிழகத்துக்கு எதிராக படம் எடுத்திருக்கிறார். இதை கேட்க தமிழகத்தில் ஆள்கள் இல்லை.

இதுபோல கேரளாவுக்கு எதிராக ஒரு படத்தை தமிழகத்தில் எடுத்து கேரளாவில் திரையிட முடியுமா. எம்புரான் படத்தில் அணைக்கு எதிராக உள்ள காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் முன் விவசாய சங்கங்கள் மட்டுமில்லாது அரசியல் கட்சியினர், பிற அமைப்பினரை சேர்த்து முற்றுக்கை போராட்டங்களை நடத்துவோம்.

படக்குழு தமிழக விவசாயிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையெனில் தமிழக அரசு எம்புரான் படத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்துவோம்'' என்றார். 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்?

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு புரதச்சத்து மிக மிக அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் நம் உணவில் இருக்க வேண்டும், தரமான புரதச்சத்தை எப்படி எடுத்துக்கொள்வது, புரதச்சத்துமிக்க உணவுகள... மேலும் பார்க்க

``வியூக அமைப்பாளர்களின் கையில் இன்றைய அரசியல் சிக்கியுள்ளது'' - CPIM மாநாட்டில் ராஜூ முருகன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கதில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், "இந்த மாநாடு வரலாற்று சிறப்பு... மேலும் பார்க்க

Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?

Doctor Vikatan: என் வயது 38. எனக்கு 20 ப்ளஸ் வயதிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் அப்போதிலிருந்து தலைக்கு ஹென்னாதான்உபயோகிக்கிறேன். கடந்த சில வருடங்களாக என் தோழி சொன்னதன்பேரில், முதல் நாள... மேலும் பார்க்க

``திமுக கரை வேட்டி கட்டினால் நெற்றியில் பொட்டை அழித்துவிடுங்கள்..'' - ஆ.ராசா பேசியது என்ன?

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாணவ... மேலும் பார்க்க

WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையில் நிறைவேற்றம்

12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு, நேற்று மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்' படத்தை தடை செய்ய வேண்டும்'' - வைகோ

மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக அதில் வரும் கலவரம் குறித்த சித்தரிப்புகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாகக் கூறப்பட்டது. இதனால் வலதுச... மேலும் பார்க்க