செய்திகள் :

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப்படை காவலரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

post image

மதுரை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப் படை காவலரின் உடல் போலீஸாா் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்தவா் மலையரசன் (36). இவா் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் தனிப் படை காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி பாண்டிசெல்வி அண்மையில் நேரிட்ட காா் விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதையடுத்து, மனைவியின் மருத்துவ ஆவணங்களை வாங்கச் செல்வதாகக் கூறி விட்டு, திங்கள்கிழமை மதுரைக்கு வந்த மலையரசன் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்த நிலையில் இவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது.

இதையடுத்து, மலையரசனை கொலை செய்தவா்களை கைது செய்யக் கோரியும், அதுவரை உடலை பெற மாட்டேம் எனக் கூறியும், அவரது உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மலையரசனின் குடும்பத்தினரிடம் காவல் துறை உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, அவரது உடலை குடும்பத்தினா் பெற்று தத்தனேரி மின் மயானத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு காவலா்கள் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க