செய்திகள் :

எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்து - பரவும் வீடியோ!

post image

புதிய கார் வாங்குவது இந்தியர்களுக்கு எப்போதுமே ஒரு மிகப் பெரிய சாதனைதான். அப்படித்தான் அதீத சந்தோஷத்துடன் தனது மகிந்திரா தார் காரை வாங்கியிருக்கிறார் 29 வயதான மானி பவார்.

சாலைக்கு கொண்டுசெல்லப்படும் முன்னரே புதிய காருக்கு வழக்கமாக நடத்தப்படும் சடங்குகளை ஷோரூமிலேயே செய்திருக்கிறார் மானி. அதன்பகுதியாக ஒரு எலுமிச்சைப் பழத்தை காரின் டயருக்கு அடியில் வைத்து ஏற்ற அவர் செய்த முயற்சி காரையே காலிசெய்யும் செயலாக முடிந்திருக்கிறது.

Thar Roxx

எலுமிச்சை பழத்தை அடியில் வைத்துவிட்டு, ஆக்ஸிலேட்டரை ஓரே மிதியாக மிதித்ததில் பீஸ்ட் பட காட்சி போல ஷோரூமின் முதல் தளத்திலிருந்து பறந்து வந்து விழுந்திருக்கிறது அவரது கார், தார்.

நடந்தது என்ன?

கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 8) டெல்லியின் நிர்மன் விகார் பகுதியில் உள்ள மகிந்திரா ஷோரூமில் 27 லட்சம் மதிப்புள்ள தார் காரை டெலிவெரி எடுக்கச் சென்றுள்ளார் மானி பவார். காருக்கு பூஜை செய்து அதன் சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சையை வைத்துள்ளார்.

லேசாக ஆக்ஸிலேட்டரை மிதித்தால் எலுமிச்சை எளிதாக நசுங்கிவிடும். அதற்காக காரில் ஏறி அமர்ந்த மானி, தவறுதலாக அதிக அழுத்தம் கொடுத்து அழுத்தியிருக்கிறார்.

இதனால் காருக்குள் இருந்த மானியும் விகாஸ் என்ற ஷோரூம் ஊழியரும் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பறந்துவந்து நடைபாதையில் விழுந்துள்ளனர்.

ஷோரூமுக்கு வெளியே கார் தலைகீழாக கவிழ்ந்தபடி கிடக்கும் வீடியோ இணையமெங்கும் பரவி வருகிறது. காரில் ஏர் பேக்குகள் வேலை செய்ததால் இருவருக்கும் உடலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அருகில் இருந்த மாலிக் மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கார் வாங்க உடன் வந்த மானியின் கணவர் பிரதீப் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

Red Moon: `ரத்த நிலவு' இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று சந்திர கிரகணம்!

சந்திர கிரகணம்:இன்று இரவு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்த கிரகணத்தின் போது நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் இந்திய வான்... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``நாய்களுக்காக மனிதர்களை வெறுப்பது நல்ல மனோபாவம் அல்ல” - எஸ்.வி. சேகர்

சமீபத்தில் தெருநாய் விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைபாடு ஒன்றாகவே உள்ளது.இதற்கிடையில், “தெருநாய்களுக... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்'' - நடிகர் ராதாரவி

இந்தியாவில் தெருநாய்கள் அதிகரித்து வருவது, தெருநாய் கடி காரணமாக உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெருநாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்கள... மேலும் பார்க்க

Gaza: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காசா படம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.தொடர்ந்த தாக்குதல்களால் காசா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

Dolce Vento: புறப்பட்ட சில நிமிடங்களில் மூழ்கிய சொகுசுக் கப்பல் - வைரலாகும் வீடியோ! - என்ன நடந்தது?

சொகுசு கப்பல்:துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. கடந்த 2-ம் தேதி துருக்கியின் ... மேலும் பார்க்க

துபாயில் ரூ.35 கோடி லாட்டரி வென்ற இந்திய தொழிலாளி - என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், 1 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278 டிரா நடைபெற்றது. இதில் சந்தீப... மேலும் பார்க்க