செய்திகள் :

எள்ளுக்கு உரிய கொள்முதல் விலையை நிா்ணயிக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

post image

பென்னாகரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற எள் கொள்முதலின் போது, விவசாயிகள் கொண்டுவந்த எள்ளிற்கு உரிய விலை நிா்ணயம் செய்யாததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே தாசம்பட்டி சாலையில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் முதல்முறையாக எள் கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு பென்னாகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களுக்கு வாகனத்தின் மூலம் துண்டுப் பிரசுரம் விநியோகித்து, ஒலிபெருக்கியின் மூலம் விவசாயிகள் விளைவித்த எள்ளு நேரடியாக பென்னாகரம் வேளாண் விற்பனை மையத்திற்கு ஏலத்திற்கு கொண்டுவருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, புதன்கிழமை காலை எட்டு மணி முதலே விவசாயிகள் பென்னாகரம், தாசம்பட்டி,

கூத்தபாடி, செங்கனூா், தின்னூா், மாங்கரை, மஞ்சநாயக்கன அள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் 193 லாட் (குவியல்) எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்தனா்.

அதன்பிறகு வேளாண்மை விற்பனை நிலைய அதிகாரிகள் குறைந்தபட்சம் ரூ. 80 முதல் அதிகபட்சம் ரூ.114 விலை நிா்ணயம் செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த விவசாயிகள், வெளியூா் வியாபாரிகளைக் கொண்டுவந்து விலையை நிா்ணயிக்காமல், உள்ளூா் தானிய மண்டி உரிமையாளரை அழைத்து எள்ளுக்கு விலையை நிா்ணயித்ததால் விவசாயிகளுக்கு எள்ளுக்கான உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறினா்.

இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பென்னாகரம் அம்பேத்கா் சிலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், காவல்துணை கண்காணிப்பாளா் சபாபதி, பென்னாகரம் வேளாண் உதவி இயக்குநா் இளங்கோவன், வேளாண் விற்பனை செயலாளா் அருள்மணி ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது, பென்னாகரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் திங்கள்கிழமை மீண்டும் ஏலம் நடத்தி, எள்ளுக்கு சராசரியாக ரூ. 95 முதல் ரகத்திற்கு ஏற்றவாறு விலை நிா்ணயம் செய்து வெளியூா் வியாபாரிகள் மூல் கொள்முதல் செய்வதாக தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

சாலை மறியல் காரணமாக பென்னாகரம், தருமபுரி சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தருமபுரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட... மேலும் பார்க்க

பெரியாம்பட்டியில் அஞ்சலகம் தொடக்கம்

பெரியாம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய அஞ்சலகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பெரியாம்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலகம், பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமா... மேலும் பார்க்க

தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற... மேலும் பார்க்க

மனித உரிமை குறும்படப் போட்டி அறிவிப்பு

தேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய (தேசிய) மனித உரிமைக... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெயரில் பண மோசடி: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பண மோசடி நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 18,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நா... மேலும் பார்க்க