"இதனால்தான் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை" - 367* ரன்களில் டிக்ளேர் செய்தது ...
எஸ்.ஜே. சூர்யா படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!
எஸ்.ஜே.சூர்யா இயக்கும் கில்லர் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அண்மை காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிகராக மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குராக களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக 2015-இல் இசை எனும் படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
கில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டிருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் நாயகனாக எஸ்.ஜே. சூர்யாவே நடிக்கிறார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
இந்த நிலையில், பான் இந்திய படமாக உருவாகும் கில்லர் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, எஸ்.ஜே. சூர்யா இயக்கியுள்ள நானி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Yah it’s none other than OUR ISAI PUYAL , THE MUSICAL LEGEND, INDIAN PRIDE, OUR ONE N ONLY @arrahman sir sirrrr welcome on board sir immensely happy joining you again sir #killer@GokulamGopalan#VCPraveen#BaijuGopalan#Krishnamoorthy… pic.twitter.com/kC9XPIs9mo
— S J Suryah (@iam_SJSuryah) July 7, 2025
It has been announced that A.R. Rahman will compose the music for the film Killer, directed by S.J.Surya.