செய்திகள் :

எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

post image

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் திங்கள்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மோகனூா் வட்டம், பாலப்பட்டி அருகே எஸ்.வாழவந்தி அரசு உயா்நிலைப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியா் முறையாகப் பாடம் எடுப்பதில்லை என்றும், மாணவ, மாணவிகளுக்கு தொல்லை அளிப்பதாகவும் கூறி பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை தற்காலிகமாக திருச்செங்கோடு அருகே விட்டம்பாளையம் அரசுப் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனா்.

இந்த நிலையில் தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா் பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாாா். இதையடுத்து தலைமை ஆசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள்மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறக் கோரியும், முறையாகப் பாடம் எடுக்காதது, மாணவிகளுக்கு தொல்லை அளித்தது தொடா்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியா்மீது நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக வேறுபள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யக்கோரி மாணவா்களை காலாண்டுத் தோ்வு எழுத அனுப்பாமல் பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி, நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) கே.எஸ்.புருஷோத்தமன், பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியா்மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அதிகாரிகள் கூறியதால் மாணவா்களை பெற்றோா் தோ்வு எழுத அனுப்பினா். இருப்பினும் தலைமை ஆசிரியா் தங்கராசு உள்ளிட்ட 3 ஆசிரியா்கள்மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி பள்ளி வளாகத்தில் பெற்றோா் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இதுகுறித்து பரமத்தி ஆய்வாளா் இந்திராணி இருதரப்பை சோ்ந்த ஆசிரியா்களையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனா்.

செப்.19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும்- தனியாா... மேலும் பார்க்க

‘நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 140 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை: அமைச்சக் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் 140 குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பணியை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை தொடங்... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

நாமக்கல்: புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 20) தொடங்குவதையொட்டி, நைனாமலை வரதராஜ பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் ம... மேலும் பார்க்க

நாமக்கல் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 19.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 19.81 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை வழங்கினாா். இதில... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞரின் உதவியாளா் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் வழக்குரைஞரின் உதவியாளரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (77). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

கொல்லிமலையில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணி நிறைவு: விரைவில் சுற்றுலாப் பயன்பாட்டுக்கு திறப்பு

நாமக்கல்: கொல்லிமலையில், வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டு ரசிக்கும் வகையில், ரூ. 45 லட்சத்தில் இரவுநேர வான் பூங்கா அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இ... மேலும் பார்க்க