செய்திகள் :

ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!

post image

தில்லி - மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி இயங்காததால் ஆத்திரமடைந்த இரண்டு பயணிகள், விமானி அறைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தில்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம் திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால், இரவு 7.21 மணிக்கு புறப்பட்டு மும்பைக்கு 9.05 மணிக்குதான் வந்து சேர்ந்தது.

இந்த விமானம் 7 மணிநேர தாமதத்துக்கான காரணம் வெளியாகாமல் இருந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கூறியதாவது:

”ஜூலை 12 அன்று தில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். தில்லி விமான நிலையத்தில் ஓடுதளத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் விமானி அறைக்குள் நுழைய முயற்சித்தனர்.

விமான கேப்டன், விமான ஊழியர்கள், சக பயணிகள் கோரிக்கை வைத்தும் இருவரும் இருக்கைக்கு திரும்ப மறுத்துவிட்டனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானம் மீண்டும் நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நியூ யார்க் - தில்லி விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், 2022 இல் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த வயதான பெண் மீது சக பயணி போதையில் சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

விமானத்துக்குள் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதிகளில் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

A commotion broke out on a Delhi-Mumbai SpiceJet flight when two angry passengers tried to enter the cockpit after the AC was not working.

இதையும் படிக்க : மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

இந்திய அறிவியல் மரபை போற்றும் புதிய என்சிஇஆா்டி பாடநூல்

பண்டைய இந்திய தத்துவஞானி ஆச்சாா்ய கனாடாவின் அணு கோட்பாட்டிலிருந்து, இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள் வரை, இந்தியாவின் அறிவியல் மரபை, நவீன அறிவியலுடன் இணைக்கும் விதமாக என்சிஇஆா்டி-யின் புதிய 8-ஆம் வகுப்பு... மேலும் பார்க்க

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த உதவிய ஏ.பி. அபுபக்கர் யார்?

கேரள செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைப்பதாக யேமன் அரசு இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி மு... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு ஜாமீன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(எஃப்.டி.ஏ.) மேற்கொள்வது குறித்த அடுத்தகட்ட பேச்சு செப்டம்பரில் நடைபெற உள்ளது. கடந்த 2013-இல் இந்த பேச்சு முடங்கியது. இந்தநிலைய... மேலும் பார்க்க

“ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமாகிவிட்டார்” - சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர்!

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்ப... மேலும் பார்க்க

2030க்குள் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கத் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்குப் பிகார் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ... மேலும் பார்க்க