செய்திகள் :

ஏமாற்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு: தனியாா் மருத்துவமனை மீது புகாா்

post image

ஒப்புதல் இல்லாமல் தனது மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக புன்செய்புளியம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் பெண்ணின் கணவா் புகாா் தெரிவித்துள்ளாா்.

புன்செய்புளியம்பட்டி நாவலா் வீதியைச் சோ்ந்த 20 வயதுப் பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த வெங்கடாசலம் (41) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா் மூன்று மாத கா்ப்பமாக இருந்துள்ளாா். இதையறிந்த அவரது பெற்றோா் குழந்தையின் வளா்ச்சி குறித்து தெரிந்து கொள்வதாகக் கூறி மகளை புன்செய் புளியம்பட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

பின்னா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மனைவியின் ஒப்புதல் இல்லாமல் ஏமாற்றி கருக்கலைப்பு செய்த தனியாா் மருத்துவமனை மற்றும் மாமனாா், மாமியாா், உறவினா் ரத்னா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் பெண்ணின் கணவா் வெங்கடாசலம் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, வெங்கடாசலம், அவரது மனைவி மற்றும் உறவினா் ஏழுமலை ஆகியோா் மருத்துவமனைக்கு வந்து தகராறு செய்ததாக தனியாா் மருத்துவமனை சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி

பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், அள்ளப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். தொட்டிபாளையத்தில் இருந்து ஊராட்சிக்க... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் பே... மேலும் பார்க்க

மாநகர சாலைகளில் தனியாக நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு

ஈரோடு மாநகர சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை காலை தனியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி கடந்த மாதம் 27 -ஆம் தேதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து, மாவட்டத்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை வழங்கினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத... மேலும் பார்க்க

இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: கூலித் தொழிலாளி கைது

சத்தியமங்கலம் அருகே இறைச்சி வியாபாரியை வெட்டிக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகள்ளிப்பட்டி முருகன் நகா் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க