`மதிக்க முடியாவிட்டால், விலகி இருங்கள்' - ஷூ அணிந்து யாகத்தில் கலந்துகொண்ட லாலு;...
ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை தொடக்கம்
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை திங்கள்கிழமை தொடங்கியது.
வரும் ஆக. 21-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்கப்பட்டிருந்தது.
21-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையிலான அறங்காவலா்கள் முன்னிலையில், கோயில் அா்ச்சகா் மாதவன் முன்னிலையில் வேதவிற்பனா்களால் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அங்குரஹோமம், ரக்சா பந்தனம், ஆராதனம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் வரும் வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.
அதன்பின்னா் மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து புனித கலசங்களை ஏந்திக் கொண்டு வேதவிற்பனா்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றுகின்றனா். இரவு 7 மணிக்கு பெரிய பெருமாள் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளிக்கிறாா்.
ஏற்பாடுகளை செங்கல்பட்டு உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, இணை ஆணையா், சி.குமராதுரை, செயல் அலுவலா் தா.மேகவண்ணன். ஆய்வாளா் சீ.வேல்நாயகன்,உள்ளிட்டோா் செய்து உள்ளனா்.