செய்திகள் :

ஏலகிரியில் பலத்த காற்றால் காா் மீது சாய்ந்த மரம்: 4 போ் உயிா் தப்பினா்

post image

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் இடி, மின்னலுடன் ஏற்பட்ட பலத்த காற்றால் காா் மீது மரம் சாய்ந்து விழுந்தது. காரில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் ஏலகிரி மலைக்கு திராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பயணித்து வருகின்றனா். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியதில் அத்தனாவூா் கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணியின் காா் மீது ராட்சத மரம் ஒன்று விழுந்தது. காரின் முன் பக்கம் விழுந்ததால் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். தகவலறிந்து அங்கு சென்ற ஏலகிரி போலீஸாா் காரின் உள்ளே இருந்தவா்களை பத்திரமாக மீட்டு, ராட்சத மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், மரம் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் ஏலகிரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்தையும் சரி செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட துறையினா் பணியில் ஈடுபட்டனா். இதேபோல் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, அதன் சுற்றுப் பகுதிகளில் இடி, மின்னல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கந்திலி பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொரட்டி பகுதியிலும் 2 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.

பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.28 லட்சம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அமைந்துள்ள இக்கோயிலில் நிரந்தர உண்டியல் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு பக்தா... மேலும் பார்க்க

ரூ.80 லட்சத்தில் அரசு திட்டப் பணிகள்: ஆம்பூா் எம்எல்ஏ அடிக்கல்

மாதனூா் ஒன்றியத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் அரசு திட்டப் பணிகளுக்கு ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். மாதனூா் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் ரூ.39.48 லட்சத்தில், மலையாம்பட்ட... மேலும் பார்க்க

ரூ.1.20 கோடியில் திட்டப் பணிகள்: குடியாத்தம் எம்எல்ஏ அடிக்கல்

ரூ.1.20 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட மாதனூா் ஒன்றியம் சின்னவரிக்கம், அயித்தம்பட்டு, சின்ன கொம்மேஸ்வ... மேலும் பார்க்க

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 9-ஆம் ஆண்டு விழா விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர... மேலும் பார்க்க

கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

வேலூா் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலுாா் அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகள் கீா்த்தனா (19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (22... மேலும் பார்க்க

குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

திருப்பத்தூா் நகராட்சி குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற வேண்டும் என எம்எல்ஏ அ.நல்லதம்பி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி நகராட்சி வாா்டு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்வ... மேலும் பார்க்க