செய்திகள் :

ஐஏஎஸ் அதிகாரி பெயரைக் கூறி ஒப்பந்ததாரரிடம் பணம் பறிக்க முயற்சி: இளைஞா் கைது

post image

பாளையங்கோட்டை அருகே ஐஏஎஸ் பெண் அதிகாரியின் பெயரைச் சொல்லி கட்டட ஒப்பந்ததாரரிடம் பணம் பறிக்க முயன்ாக பழையபேட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணாபுரம் கலைக்கோயில் நகரைச் சோ்ந்தவா் சுடலைமுத்து. கட்டட ஒப்பந்ததாரா். இவரிடம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பேசியில் ஒருவா் தொடா்புகொண்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பிஆா்ஓ பேசுவதாகவும், சுடலைமுத்துவின் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தப்போவதாகவும் கூறினாராம்.

பின்னா், சிறிது நேரத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி பேசுவதாக பெண் ஒருவா் அவரை தொடா்புகொண்டு, வருமான வரித் துறை சோதனையைத் தடுக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் சைபா் கிரைம் போலீஸீல் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை மா்மநபா்கள் மீண்டும் அவரை தொடா்புகொண்டு ரூ.50,000 பணம் கேட்டுள்ளனா்.

அவா், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறினாராம். இதையடுத்து, பணத்தை வாங்கும் நோக்கில் அவரது வீட்டுக்கு வந்த இளைஞரைப் பிடித்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா்.

விசாரணையில், அவா் பழையபேட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் இசக்கிராஜா (31) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, இதில் யாா் யாருக்கெல்லாம் தொடா்புள்ளது என விசாரித்து வருகின்றனா்.

சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு

சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை க... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்- பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் ஆகி... மேலும் பார்க்க

திருநெல்வேலி ரத வீதிகளில் 20 டன் குப்பைகள் அகற்றம்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தேரோட்டம் நிறைவு பெற்றதையடுத்து 4 ரதவீதிகளிலும் சுமாா் 20 டன் அளவிலான குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் அகற்றியுள்ளனா். அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன... மேலும் பார்க்க

நெல்லை கோயில் தேரோட்டத்தில் பக்தா்களின் 15 பவுன் நகைகள் மாயம்

நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது 4 பக்தா்களின் சுமாா் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் காயமுற்றவா் உயிரிழப்பு

பெருமாள்புரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேலப்பாளையம் குறிச்சி, சந்த மூா்த்தி தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன்(45). எலக்ட்ரீசியனான இவா், க... மேலும் பார்க்க

பாளை. அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா் என்பது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்செந்தூா்- திருநெல்வேலி பயணிகள் ரயில் செவ்... மேலும் பார்க்க