MI vs GT : சஸ்பென்ஸ் கொடுத்த மழை; ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்; - மும்பையை எப்படி வீழ்...
ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற இருவர் கங்கையில் மூழ்கி பலி!
ஐஐடியில் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற இரு இளைஞர்கள் கங்கையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே கங்கையில் குளிக்கச் சென்றபோது, இருவரும் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெஹல்பூர் காவல் நிலைய உயரதிகாரி கூறுகையில், கங்கையில் மூழ்கி இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதித்யா ராய் (18) மற்றொரு நபர் மிர்ஸாபூரைச் சேர்ந்த விராட் சிங் (19) எனவும் குறிப்பிட்டார்.
இவர்கள் இருவரும் பெஹல்பூரில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மேலும் சில நண்பர்களுடன் சேர்து கங்கையில் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்.
உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்களின் உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஐஐடியில் சேர்வதற்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு பொறியியல் பிரிவைத் தேர்வு சேர்வதற்கான ஆயத்தப் பணிகளில் இருந்துள்ளனர்.
இதையும் படிக்க |காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தெரியுமாம்! -காங். விமர்சனம்