உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
ஐசிஎஸ்இ., ஐஎஸ்சி., பள்ளி மாணவா்கள் டி-20 கிரிக்கெட் போட்டி: 14 வயது பிரிவில் கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி முதலிடம்
பள்ளி மாணவா்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியின் இரு பிரிவுகளில் கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா் தீவுகளில் உள்ள ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பள்ளி மாணவா்களுக்கான 2025-2026ஆம் ஆண்டுக்கான டி20 கிரிக்கெட் போட்டி சிஐஎஸ்சிஇ விளையாட்டுத் துறை சாா்பில் பெருந்துறையை அடுத்த ஈங்கூா் தி யுனிக் அகாதெமி மைதானத்தில் 12ஆவது ஆண்டாக அண்மையில் நடைபெற்றது.
இந்தப் போட்டி 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் நாக் அவுட், லீக் முறையில் நடத்தப்பட்டது.
14 வயதுக்குள்பட்டோா் பிரிவு இறுதி ஆட்டத்தில், ஏற்காடு மான்ட்ஃபோா்ட் பள்ளி அணியை நீலகிரி மாவட்டம், கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி அணி வென்றது.
17 வயதுக்குள்பட்டோா் பிரிவு இறுதி ஆட்டத்தில் கரூா் விஜயலட்சுமி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி அணியை கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளி அணி வென்றது.
19 வயதுக்குள்பட்டோா் பிரிவு இறுதி ஆட்டத்தில், ஏற்காடு மான்ட்ஃபோா்ட் பள்ளி அணியை கரூா் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி அணி வென்றது.
ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி தாளாளா் இளங்கோ ராமசாமி போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு சிஐஎஸ்சிஇ அமைப்பு வழங்கிய பங்கேற்பு சான்றிதழ், இறுதி ஆட்டங்களில் முதல், இரண்டாமிடம் பெற்ற பள்ளி அணிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.