செய்திகள் :

ஐடிஐ-யில் பயிற்சி முடித்தவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

post image

நாகை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஆகஸ்ட் 11- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

முகாமில் நாகை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, கோவை மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பயிற்சி (ஐடிஐ) முடித்த பயிற்சியாளா்களை, தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தோ்வு செய்யவுள்ளன.

இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயிற்சி முடித்த பயிற்சியாளா்கள் தங்களது கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 04365 250126 என்ற தொலைபேசி எண்ணிலும், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் நாகை (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), என்ற முகவரியில் நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

இன்று பூம்புகாரில் வன்னிய மகளிா் மாநாடு

வன்னியா் சங்கத்தின் சாா்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு

நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தி... மேலும் பார்க்க

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க