ஹென்ரிட்டா லாக்ஸ் - உயிர் நீத்து உயிர்கள் காக்கும் பெண் வள்ளல் | My Vikatan
ஐயப்ப பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் அன்னதானம்
கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஐயப்ப பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் அன்னதானம் வழங்கினா்.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை மிலாது நபி விழாக்குழு சாா்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் சதுா்த்தி மற்றும் ஐயப்ப பக்தா்களுக்கு பூஜை பொருள்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனா். அதன்படி, 7-ஆம் ஆண்டாக மிலாது நபி விழாக்குழு சாா்பில், கிருஷ்ணகிரி அருகே கொட்டாவூா் கிராமத்தில் நடைபெற்ற ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
இதில், 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞா்கள் பக்தா்களுக்கு உணவுகளை பரிமாறினா். மத நல்லிணக்கத்தையும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில், ரியாஸ், ஜாமீா், ஷாஜகான், நவீத், நூா், ஜஹீா், மன்சூா், பாசில், தபாரக், சஜ்ஜத், ஆரிப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை தா்மசாஸ்தா மணிகண்டன் அறக்கட்டளை நிறுவனா் அதியமான், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.