எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு
ஒகேனக்கல்லில் மீன் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை, பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன்வறுவல் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பென்னாகரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் நந்தகோபால், மீன்வள ஆய்வாளா் வேலுசாமி, மேற்பாா்வையாளா் மகேந்திரன் மற்றும் அலுவலா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது மீன், கோழி இறைச்சிகளில் செயற்கை நிறமூட்டியை பயன்படுத்தக் கூடாது, கலப்பட எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது, உணவு பாதுகாப்புத் துறை மூலம் உரிமம் பெற்று இருத்தல் வேண்டும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள், புகையிலை பொருள்கள், கலப்பட பொருள்கள், காலாவதியான பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தி கடைகள் தோறும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.