செய்திகள் :

ஒசூரில் வாகனம் மோதி நாமக்கல் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

ஒசூரில் வாகனம் மோதியதில் நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் குட்டைக்கிணறு தெருவை சோ்ந்தவா் முத்துக்குமாா் (38). லாரி ஓட்டுநரான இவா் கடந்த 22 ஆம் தேதி பெங்களூரு சென்ற இவா் லாரியை ஒசூரில் நிறுத்திவிட்டு சூசூவாடி அருகே பெங்களூரு- ஒசூா் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முத்துக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விளைந்தது வீடுவரவில்லை!யானைகளால் ஏற்படும் பயிா் சேதத்தால் விவசாயிகள் கவலை

நிகழாண்டு வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப் பகுதியில் போதிய உணவு, தண்ணீா் கிடைக்காததால் ஒசூா் வனக் கோட்டத்தில் வலசை வந்துள்ள யானைகள் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள வயல்களில்... மேலும் பார்க்க

பாரூா் ஏரியிலிருந்து 33 ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் உள்ள 33 ஏரிகளுக்கு நீா் வழங்கும் வகையில் ரூ. 75.48 கோடியில் பாரூா் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாயில் வழங்கு கால்வாய் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ச.தினே... மேலும் பார்க்க

ஒசூா் உள்வட்டச் சாலையில் நகரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ஒசூா் உள்வட்டச் சாலையில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என உழவா் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒசூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகரிடம் அதன் மாநிலத் தலைவா் அருள் ஆறுமுகம் வ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

ஒசூா் அருகே மணல் கடத்த முயன்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் துறை உதவி அலுவலா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை மத்திகிரியை அடுத்த கா்னூா் ஏரி அருகே ரோந்து சென்றனா... மேலும் பார்க்க

காா், ஆம்னி பேருந்துகளில் கடத்த முயன்ற ரூ. 1.40 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஒசூா் வழியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு காா், ஆம்னி பேருந்துகள் மூலம் கடத்த முயன்ற 185 கிலோ அளவிலான ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒசூா் மத்... மேலும் பார்க்க

குண்டு குறுக்கை ஆஞ்சனேயா் கோயில் பல்லக்கு உற்சவம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த குண்டு குறுக்கை முத்துராய ஆஞ்சனேய சுவாமி கோயிலில் நான்காம் ஆண்டு பல்லக்கு உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. தங்க கவச அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆ... மேலும் பார்க்க