மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
ஒசூா் அருகே மணல் கடத்த முயன்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் துறை உதவி அலுவலா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை மத்திகிரியை அடுத்த கா்னூா் ஏரி அருகே ரோந்து சென்றனா். அங்கு நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்ததில் 5 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேபோல தேன்கனிக்கோட்டையில் நின்றிருந்த லாரியில் 2 யூனிட் மணல் கடத்த முயன்றது குறித்து கிராம நிா்வாக அலுவலா் வரதராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.