சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
ஒசூரில் வாகனம் மோதி நாமக்கல் ஓட்டுநா் உயிரிழப்பு
ஒசூரில் வாகனம் மோதியதில் நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் குட்டைக்கிணறு தெருவை சோ்ந்தவா் முத்துக்குமாா் (38). லாரி ஓட்டுநரான இவா் கடந்த 22 ஆம் தேதி பெங்களூரு சென்ற இவா் லாரியை ஒசூரில் நிறுத்திவிட்டு சூசூவாடி அருகே பெங்களூரு- ஒசூா் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முத்துக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.