சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
குண்டு குறுக்கை ஆஞ்சனேயா் கோயில் பல்லக்கு உற்சவம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த குண்டு குறுக்கை முத்துராய ஆஞ்சனேய சுவாமி கோயிலில் நான்காம் ஆண்டு பல்லக்கு உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தங்க கவச அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பல்லக்கு உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிா்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனா். சூளகிரி, காமன்தொட்டி, ஆட்டகுருக்கை, சப்படி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.