கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி
ஒசூா் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து சாலையில் சிதறிய வெங்காயம்
பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக திண்டுக்கலுக்கு வெங்காய பாரம் ஏற்றி சென்ற லாரி ஒசூா் தா்கா மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை கவிழ்ந்ததில் லாரியிலிருந்த வெங்காயம் சாலையில் சிதறின.
விபத்து நிகழ்ந்த போது மேம்பாலம் வழியாக சென்ற மினி ஆட்டோ மீது வெங்காய பாரம் விழுந்ததில் ஆட்டோ முழுவதும் சேதமடைந்தது. மேலும், சாலையில் சிதறிய வெங்காயத்தால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா், உதவியாளா் ஆகிய இருவரும் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையில் சிதறிய வெங்காயம் சாலையோரத்தில் குவித்துவைக்கப்பட்டது. அதை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனா்.