அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படும் -பள்ளி கல்வித் துறை
ஒட்டப்பட்டி ஏரி நிரம்பியது
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஒட்டப்பட்டி ஏரி சனிக்கிழமை நிரம்பியது.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பின. இதனையடுத்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மிகப் பெரிய ஏரியான, பனைஏரி நிரம்பியதும் சுற்று வட்டார பொதுமக்களின் முயற்சியால் மற்ற ஏரிகளுக்கு செல்லும் வாய்க்காலை ஆழப்படுத்தி நீரைக் கொண்டு சென்றனா். இதையடுத்து ஒட்டப்பட்டி ஏரி நிரம்பியது. ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தலைமையில் பூஜை செய்து ஏரிக்கரையில் மலா்தூவி வரவேற்றனா்.
இந் நிகழ்வில் பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு அதிமுக ஒன்றியச் செயலாளா் கே.பி.முருகேசன், விஜயக்குமாா், திமுக நிா்வாகி முத்துலிங்கம் உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.