செய்திகள் :

ஒபாமா கையில் விலங்கு; சிறையில் அடைப்பு! உண்மையில்லை, டிரம்ப் பகிர்ந்த ஏஐ விடியோ!!

post image

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கிட்டு, சிறையில் அடைக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட விடியோவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் சித்தரிக்கப்பட்டவை என்றோ, உண்மையான விடியோ அல்ல என்றும் டிரம்ப் பதிவிடாதது கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ட்ரூத் என்ற சமூக வலைத்தளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்திருக்கும் விடியோவில், யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை என்றும் பதிவிடப்பட்டிருக்கிறது.

அதில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய விடியோ ஒன்றில், அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தில், ஒபாமாவை தரையில் அமர்த்தி, கைகளை பின்னால் எடுத்து, இரண்டு எஃப்பிஐ அதிகாரிகள் விலங்கிடுகிறார்கள். இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் சோஃபாவில் அமர்ந்து புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருப்பதாக அந்த விடியோ அமைந்துள்ளது.

அந்த போலியான விடியோ, ஒபாமா சிறையில், கைதிகளுக்கான ஆரஞ்சு நிற சீருடையில் நின்றிருப்பது போல முடிகிறது.

இந்த விடியோ போலியானது என்றோ, சித்தரிக்கப்பட்டது என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்பில்லாதவர் என்ற விமர்சனங்களும் வந்துள்ளன.

கடந்த வாரம், பராக் ஒபாமா ஒரு மிகப்பெரிய தேர்தல் மோசடியாளர் என்று டிரம்ப் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த விடியோவை இன்று பகிர்ந்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், 2016 தேர்தலுக்குப் பிறகு, டிரம்ப்-ரஷ்யா கூட்டுக் கோட்பாட்டை முன்னாள் ஒபாமா அதிகாரிகள் தயாரித்ததாக அதிர்ச்சியூட்டும், மிக முக்கிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார். மேலும், ஒபாமா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில்தான், டிரம்ப் இதுபோன்ற ஏஐ தயாரித்த விடியோவை வெளியிட்டு, பொறுப்பற்ற அதிபர் என்ற விமர்சனத்தைப் பெற்று வருகிறார்.

President Donald Trump has caused a stir after sharing an artificial intelligence (AI)-generated video of former US President Barack Obama being handcuffed and imprisoned.

துருக்கியில் அணுசக்தி பேச்சு

ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சு... மேலும் பார்க்க

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

யுனெஸ்கோவில் இருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுவதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ்... மேலும் பார்க்க

இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர். யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் ந... மேலும் பார்க்க

தலைப்புச் செய்தியான கோல்ட்பிளே கிஸ் கேமரா விடியோ! ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் வேலை என்ன?

அமெரிக்காவில், கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் இருந்தபோது பதிவான விடியோ வைரலான நிலையில்,... மேலும் பார்க்க