பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு
ஒய் ரக கார்களின் விநியோகத்தை தொடங்கிய டெஸ்லா இந்தியா!
புதுதில்லி: இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒய் ரக கார்களை அறிமுகப்படுத்திய பிறகு, அதன் விநியோகத்தை தொடங்கியுள்ளதாக டெஸ்லா இந்தியா இன்று அறிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் தனது 'ஒய்' மாடலின் விநியோகத்தை தொடங்கியுள்ள நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய மாடல் ஒய் உரிமையாளர்களுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும். இது வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு வசதியாக அமையும்.
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் உலகின் சிறந்த விற்பனையான மின்சார வாகனமான ஒய் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. பின்புற சக்கர இயக்கி மற்றும் நீண்ட தூர பின்புற சக்கர இயக்கி மூலம் முறையே 500 கி.மீ. மற்றும் 622 கி.மீ. வரம்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் நீண்ட தூர மாடலான ஒய் ரக வாடிக்கையாளர்களுக்கான விநியோகத்தையும் விரைவில் தொடங்கும் என்றது டெஸ்லா.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!