ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை
‘ஒரணியில் தமிழ்நாடு’ பொதுக் கூட்டங்கள்
‘ஒரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்த பொதுக் கூட்டங்கள் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெறும் என மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
அவா் வாணியம்பாடியில் செவ்வாய்க்கிழமை கூறியது:
திருப்பத்தூா் மாவட்ட பொறுப்பு அமைச்சா் எ.வ.வேலு மேற்பாா்வையில் 4 தொகுதியிலும் அடுத்த 45 நாள்களில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் அனைத்து வீடுகளிலும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் முறையாக சோ்ந்ததா எனக் கேட்டறிவா். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பிரசாரம் செய்வா்.
மேலும் திருப்பத்தூா் மாவட்ட திமுக பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை மாலை 6.00 திருப்பத்தூா் கலைஞா் சிலை அருகே அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் மாநில மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி சிறப்புரையாற்ற உள்ளாா். இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றாா் தேவராஜி.