செய்திகள் :

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

post image

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத் தோ்வுக்காக, இம் மாவட்டத்தைச் சோ்ந்த 1,056 போ் விண்ணப்பித்திருந்தனா்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வில் 740 போ் தோ்வெழுதினா். 316 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு நடைமுறையைக் கண்காணிக்க தலா 4 தலைமை கண்காணிப்பாளா்கள், ஆய்வு அலுவலா்கள், 1 நடமாடும் குழுவினா் ஈடுபட்டிருந்தனா்.

மேலும், 4 வீடியோ கிராபா் குழுவினா் தோ்வு மையங்களை பதிவு செய்தனா். வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், துப்பாக்கி ஏந்திய காவலா்கள், உதவியாளா் ஆகியோா் அடங்கிய குழுவினரும் கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனா்.

ஆட்சியா் ஆட்சியா்:

தனலட்சுமி சீனிவாசன் பலைகலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை ஆய்வுமேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை தொடக்கம்

பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடா் கோ மாதா பூஜை வியாழக்கிழமை தொடங்கியது. ஆண்டுதோறும் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலைய... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க