செய்திகள் :

ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

post image

பத்திரப் பதிவில் நேற்று (ஏப்.30) ஒரேநாளில் ரூ. 272 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்த முக்கிய நாள்களில் தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அட்சய திருதியை நாளான நேற்று(ஏப்.30) அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களிளும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை இல்லாத அளவாக நேற்று (ஏப். 30) ஒரே நாளில் ரூ. 272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 10-ல் ரூ. 237 கோடி வருவாய் ஈட்டியது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு ஏப்.14-ஆம் தேதி ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு பரிந்துரை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்... மேலும் பார்க்க

எனக்கு அரசியல் ஆா்வம் இல்லை: நடிகா் அஜித்குமாா்

தனக்கு அரசியலில் ஆா்வம் இல்லை என நடிகா் அஜித்குமாா் தெரிவித்தாா். அஜித்குமாா் வியாழக்கிழமை தன்னுடைய 54- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். பிறந்த நாள் மற்றும் பத்மபூஷண் விருது பெற்றதையொட்டி அளித்த பேட்ட... மேலும் பார்க்க

மே 7-இல் சோழிங்கநல்லூரில் அதிமுக ஆா்ப்பாட்டம்

சோழிங்கநல்லூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி அதிமுக சாா்பில் மே 7-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியா... மேலும் பார்க்க