செய்திகள் :

ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் நகை திருடிய பெண் கைது

post image

மன்னாா்குடியில் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகையை திருடிய பெண் சமையலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அசேசம் ராஜலெட்சுமி நகா் முருகேவல் மனைவி லலிதா (65). அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். மகன், மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனா். லலிதா மட்டும் தனியே வசித்து வந்தாா்.

அதே பகுதியை சோ்ந்த மகாலிங்கம் மனைவி சித்ரா (50). சமையலராக பணியாற்றி வருகிறாா். சித்ரா அவ்வப்போது லலிதா வீட்டுக்கு வந்து நட்புடன் பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 26- ஆம் தேதி லலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபோது அங்கு வந்த சித்ராவிடம் தனக்கு கழுத்தில் தைலம் தேய்த்து

விடுமாறு கூறி, தான் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி அருகே வைத்தாராம். சித்ரா அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரத்துக்கு பிறகு பாா்த்தபோது சங்கிலியை காணவில்லையாம்.

இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் லலிதா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்ததில், இதில் சித்ராவுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சனிக்கிழமை அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனா். சித்ராவை மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருவாரூா் மகளிா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. நீடாமங்கலம், மன்னாா்குடி ஆகிய வட்டத்தில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: முத்துப்பேட்டையில் படகுகள் நிறுத்திவைப்பு

முத்துப்பேட்டை பகுதியில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் முகத்துவாரத்தில் ஆயிரக்கணக்கான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 12 கடலோர மீனவ கிராமங்களிலிருந... மேலும் பார்க்க

பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவாரூரில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வனத்துறை அமைச்சா் க. பொன்முடி பெண்கள் குறித்து அவதூறான கருத்து... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வு: தோ்ச்சிப் பட்டியல் குறைகளை சரி செய்ய கோரிக்கை

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனாய்வு தோ்வின் தோ்ச்சிப் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்... மேலும் பார்க்க

காசோலை வழங்க லஞ்சம்: நகராட்சி கட்டட ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவாரூா் அருகே ராஜீவ்காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டிய வீட்டுக்கு காசோலை வழங்க லஞ்சம் கேட்ட நகராட்சி கட்டட ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் தலைமை குற்றவியல் நீ... மேலும் பார்க்க

மதுக்கூட உரிமையாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையைக் கைவிடக் கோரிக்கை

திருவாரூரில், மதுக்கூட உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே விளமலில், மாவட்ட டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் நலச்ச... மேலும் பார்க்க