செய்திகள் :

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

post image

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், கேப்டன் ஷுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மழை குறுக்கீடு

உணவுஇடைவேளை நிறைவடைந்து போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மழை விடுவதும், பின்பு தொடர்வதும் என போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழை நின்று விரைவில் மீண்டும் போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு; முதலிடம் யாருக்கு?

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 21 ரன்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய சாதனை படைப்பதை தவறவிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்... மேலும் பார்க்க

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் சஹால் விவாகரத்து குறித்து பேசும்போது தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். சஹாலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ப... மேலும் பார்க்க

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுல் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. க... மேலும் பார்க்க