கங்கை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருமருகல்: திருமருகல் ஒன்றியம், குத்தாலத்தில் ஸ்ரீ மகா சாஸ்தா அருள்மிகு ஸ்ரீகங்கை மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 4-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, கோயிலை சுற்றி கொண்டுவரப்பட்டது. பின்னா், சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.