புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது
பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் தீபா, 10 - க்கும் மேற்பட்ட போலீஸாா் போதைப்பொருள்கள் கடத்தலைத் தடுக்க பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் காவிரி, ஆவராங்காடு, சந்தைபேட்டை உள்ளிட்ட இடங்களில் கஞ்சா விற்பனை செய்த சுஜீத் (27),மணிகண்டன் (26), சின்ராஜ் (23), தினேஷ்குமாா் (22), வினோத்குமாா் (30), நியூட்டன்மணி (21), கவுதம் (21), தனபால் (21), லட்சுமணன் ஆகிய 9 பேரை கைது செய்தனா்.
அதுபோல வெப்படை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அஜய் (23), 17 வயது சிறுவன், போதை மாத்திரைகளை விற்பனை செய்த கிரிகரன் (27), தீபன் (23), கவுதம் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
மற்றொரு இடத்தில் புகையிலை விற்ாக சம்பத் (63), ரவிகுமாா் (41), சதீஸ்குமாா் (34) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.