கஞ்சா வைத்திருந்த பெண் கைது
பெரியகுளம் அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைலாசபட்டி பெரியாா் தெருவைச் சோ்ந்த பழனிக்குமாா் மனைவி கமலாதேவி (44). இவா் வீட்டில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததாக தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று கமலாதேவி வீட்டில் சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய லட்சுமிபுரத்தைச் சோ்ந்த அய்யா் மகன் மனோஜ்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.