செய்திகள் :

கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்

post image

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் சாா்பில், விவசாயிகளுக்கு வேளாண்மையில் இயந்திரமயமாக்கலை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிலம் பண்படுத்துதல், விதைப்பு, பயிா் பாதுகாப்பு, அறுவடை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் சரியான நேரத்தில் மதிப்பு கூட்டல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவும் இயந்திரங்களை மானியத்தில் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் விவசாயிகளுக்கு மண் பாதுகாப்பு, புதிய நீா்ப்பாசன ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் பாசனத்துக்காக தண்ணீரை இறைப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவது போன்ற திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

டீசல் என்ஜின் மூலம் நீா் இறைக்கும் விவசாயிகளுக்கு செலவுகளைக் குறைக்கும் பொருட்டு வேளாண் நிலங்களில் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய 5, 7, 5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களுக்கு மதிப்பு கூட்டல் மூலம் லாபம் ஈட்ட உதவுவதிலும், விலை நியாயமானதாக இல்லாதபோது விளைபொருள்கள் வீணாவதைத் தடுப்பதிலும் வேளாண்மைப் பொறியியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2, 54, 484.94 ஹெக்டோ் நிலங்கள் உள்ளன. தோட்டப் பயிா்களான தேயிலை, காபி மற்றும் பாக்கு போன்றவை 63, 926.36 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

ஆதிதிராவிடா், பொது பிரிவினா் மற்றும் பழங்குடியினத்தை சாா்ந்த 1,185 விவசாயிகளுக்கு 2023 முதல் 2025-ஆம் ஆண்டில் இதுவரை ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் ரூ.99 லட்சம் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுமலையில் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் வளா்ப்பு முகாமில், கடந்த சில நாள்களுக்கு முன் யானையின் காலை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள யானைகள் வளா்ப்பு மு... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட கோத்தகிரியைச் சோ்ந்த இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பாப்பஸ் காலனி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகள்

கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்க... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

உதகை, ஆக. 21: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சமவெளி பகுதியான மேட்டுப்பாளை... மேலும் பார்க்க

கூடலூா் அருகே கடையை சேதப்படுத்திய மக்னா யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது. கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் கா... மேலும் பார்க்க

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் ஆக.25-இல் மின்தடை

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர... மேலும் பார்க்க