மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
கடலூரில் சாலையில் சாய்ந்த மின் கம்பம்
கடலூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரே நெல்லிக்குப்பம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் இருந்த மின் விளக்கு கம்பம் புதன்கிழமை மாலை அந்த வழியே செல்லும் கேபிள் வயரில் சாய்ந்து தொங்கியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நெல்லிக்குப்பம் சாலையின் நடுவே தடுப்புக் கட்டையில் இரும்பு மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கம்பங்கள் சிலவற்றின் அடிப்பகுதி துருப்பிடித்து முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை கடலூரில் திடீரென சூறைக்காற்று வீசியது. அப்போது, அரசு தலைமை மருத்துவமனை அருகே இருந்த இரும்பு மின் விளக்கு கம்பம், திடீரென சாலையின் குறுக்கே சாய்ந்தது. நல்வாய்ப்பாக அந்த கம்பத்தின் வழியே சென்ற கேபிள் வயரில் மின் கம்பம் சாய்ந்து தொங்கியதால், விபத்து தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் விரைந்து வந்து, அவ்வழியாக வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, ஒருவழிப் பாதையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனா். இதற்கிடையே, அங்கு வந்த மின் வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்துவிட்டு, மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல, கடலூா் புதுநகா் காவல் நிலையம் அருகே சாலையின் நடுவே இருந்த இரும்பு மின் கம்பம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே சாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.