செய்திகள் :

கடலூர்: அதிவேகம், பள்ளி பேருந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து; படுகாயங்களுடன் தப்பித்த குழந்தைகள்

post image

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் ஃபாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

வழக்கம்போல இன்று காலை அந்த மாணவர்களை வேனில் ஏற்றிக் கொண்ட ஓட்டுநர், வேனை அதிவேகமாக இயக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போது பூவனூர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கிறார். அப்போது பிரேக் செயலிழந்ததால் தடுப்புக் கட்டையில் மோதிய வேன், தண்டவாளத்தில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.

பள்ளி வேன் விபத்து

அந்த சத்தத்தையும், பள்ளிக் குழந்தைகளின் அலறலையும் கேட்டு ஒடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயங்களுடன் இருந்த குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்ல வேளையாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அந்த மாணவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ``அதிவேகமாக வேனை இயக்கிச் சென்ற ஓட்டுநரின் கவனக் குறைவுதான் விபத்துக்கு காரணம்” என்று கூறியிருக்கிறார் கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்.

அதையடுத்து பள்ளி வேன் மீது குற்றவியல் வழக்கைப் பதிவு செய்திருக்கிறது ரயில்வே காவல்துறை. கடந்த மாதம் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்: திருட்டு பைக், பட்டா கத்தி... விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்!

திண்டுக்கல் நாகல் நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில் மினி பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவர் வந்த வாகனத்தில் பட்டா கத்தி இருந்ததால... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய ராணுவ வீரர்; உடல் நலக்குறைவால் உயிரிழப்பு... விருதுநகரில் சோகம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, வீரஓவம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் சரண் (29) இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவ... மேலும் பார்க்க

கடலூர்: பள்ளி `ஷூ'வில் தஞ்சமடைந்த பாம்பு… கவனிக்காமல் அணிந்த 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொழுதூரைச் சேர்ந்த கண்ணன் – ராதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இளைய மகன் கௌசிக்குடன் தொழுதூரில் வசித்து வருகிறார் ராதா. கௌ... மேலும் பார்க்க

மும்பை: குண்டும் குழியுமான சாலையால் பலியான உயிர்; நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு; பின்னணி என்ன?

மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. மும்பை அருகில் உள்ள பிவாண்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற சகோதரிகள்; இடி தாக்கியதால் உயிரிழந்த சோகம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நூருல் அமீன்- கையர் நிஷா. இவர்களது மகள்களான செய்யது அஸ்மியாபானு மற்றும் சபிக்கா பானு ஆகிய இரண்டு பேரும் அ... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது" - மாநாட்டில் உயிரிழந்த ஊட்டி இளைஞர்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்... மேலும் பார்க்க