ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
கடலூர் மாவட்ட நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு!
கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணிகளை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு குழுமம் மூலமாக தேர்வு செய்ய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: 2988/NHM/18/2025
பணி: ஆண் சிகிச்சை உதவியாளர்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 15,000
தகுதி : +2 தேர்ச்சியுடன் நர்சிங் தெரபிஸ்ட்-இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பெண் சிகிச்சை உதவியாளர்
காலியிடம்: 1
சம்பளம் : மாதம் ரூ. 15,000
தகுதி : +2 தேர்ச்சிடன் நர்சிங் தெரபிஸ்ட்-இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பல்நோக்குப் பணியாளர்
காலியிடம் : 1
சம்பளம் : மாதம் ரூ. 10,000
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மருத்துவ ஆலோசகர்
காலியிடங்கள்: 2
சம்பளம் : மாதம் ரூ. 40,000
தகுதி : BYNS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவியாளர்
காலியிடங்கள் : 2
சம்பளம் : மாதம் ரூ. 10,000
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் ஆனால் தமிழில் தெளிவாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மருந்து வழங்குபவர்
காலியிடங்கள் : 2
சம்பளம்: மாதம் ரூ. 15,000
தகுதி: +2 தேர்ச்சியுடன் டிப்ளமோ பார்மசி (ஆயுஷ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cuddalore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ, விரைவுத் தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
உறுப்பினர் செயலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 13. 9. 2025