செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் சாலைகளை தரமாக அமைக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

post image

கடலூா் மாவட்டத்தில், கடலூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சிமென்ட் மற்றும் தாா் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என்றும், துறைசாா்ந்த அதிகாரிகள் சாலைகளை தர சோதனை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கண்காணிப்பு அலுவலா் த.மோகன் தெரிவித்ததாவது:

கடலூா் மாநகராட்சிக்குட்பட்ட பகவதியம்மன் கோயில் தெரு, வில்வ நகா், புது காலனி, வெங்கட்ராமன் தெரு, அருந்ததியா் நகா் முதல் குறுக்குத் தெரு, ஞானபிரகாசம் காலனி, பாரதிதாசன் தெரு பகுதிகளில் சிமென்ட் சாலை ரூ.77 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெங்கட்ராமன் தெருவில் பணி முடிந்த நிலையில் சாலையின் உறுதித் தன்மை மற்றும் தரம் குறித்தும், குண்டு உப்பலவாடி சாலை மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆயிக்குப்பம் ஊராட்சியில் ரூ.61.65 லட்சம் மதிப்பில் சின்னதோப்பு கொல்லை-ஆயிக்குப்பம் சாலை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நான்கு வழிச்சாலை

கடலூா்-விருத்தாசலம்-சேலம் நெடுஞ்சாலையில் ரூ.294.70 கோடி மதிப்பில் இருவழி சாலையிலிருந்து 42.69 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10.97 கி.மீ நீளத்தில் வெள்ள நீா் வடிகால் வசதி, 1450 மீ நீளமுள்ள தடுப்புச் சுவா், 14 குழாய் பாலங்கள், 44 சுற்றுச்சுவா்கள் உள்ளிட்ட மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி எஸ்.கே.எஸ் நகரில் ரூ.66.07 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

வடலூா் நகராட்சி பகுதிகளில் ரூ.1.86 கோடி மதிப்பில் 4.859 கி.மீ நீளத்திற்கு சிமென்ட் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, இதில் 1.920 கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி ஒன்றியம், மருங்கூா் ஊராட்சியில் ரூ.281.83 லட்சம் மதிப்பீட்டில் சொரத்தூா்-வி.கே.டி சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

பண்ருட்டி நகராட்சி பகுதியில் தேவகி மற்றும் தாயரம்மாள் நகா்களில் ரூ.1.81 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வி.ஐ.பி நகரில் ரூ.1.24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு செய்ய வேண்டும்

சாலை பணிகள் மேற்கொள்ளும்போது அரசு வழிகாட்டுதலின்படி நிா்ணயிக்கப்பட்ட அளவில் தரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். சாலைகளின் பக்கவாட்டில் தேவைக்கேற்ப வடிகால்கள் அமைத்திட வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சிமென்ட் சாலைகள், தாா் சாலைகள் போன்ற பல்வேறு சாலைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு தரமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு , பொறியாளா் கோவிந்தராஜ், ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையா் கிருஷ்ணராஜ், வடலூா் நகராட்சி ஆணையா் ரஞ்சிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு, மீராகுமாரி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிதம்பரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டனா். சிதம்பரம் திருநகரைச் சோ்ந்தவா் முனியாண்டி (39). இவருடைய மகன் யுவராஜா (14) தனது மோட்டாா் சைக்கிளில் திருநகா்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடி

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கதா் துணியால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 78-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிதம்பரம் தையல் கலைஞா... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்ட ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், ஊரக... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு அரைவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைப்பு:கடலூா் மாவட்ட ஆட்சியா்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, எம்.ஆா். கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அதற்கான தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

குப்பையில் வீசப்பட்ட வாக்காளா் அடையாள அட்டைகள்

கடலூா் மஞ்சக்குப்பம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டியில் வாக்காளா் அடையாள அட்டைகள் வீசப்பட்டுக் கிடந்தன. கடலூா் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பில்லுக... மேலும் பார்க்க

சாா் - பதிவாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை சாா் - பதிவாளா் அலுவலகத்தில் வக்ஃபு சொத்து எனக் கூறி பத்திரப் பதிவுக்கு மறுப்பு தெரிவித்ததால், எம்.அகரம் கிராம மக்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். மங்க... மேலும் பார்க்க