செய்திகள் :

கடவுச்சீட்டில் முறைகேடு: துபை செல்ல முயன்றவா் கைது

post image

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபை செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், துபை செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கிழமை புறப்படத் தயாராக நின்றிருந்தது.

அதில் செல்லவிருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்குள்படுத்தினா். இதில், திருச்சி மாவட்டம் துறையூா் வட்டம், அம்மாபட்டி அருகே உள்ள கலியப்பட்டி தெற்கு மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த பி. பிரசாந்த் (32) என்பவா் தனது முகவரியை போலி ஆவணங்கள் மூலம் மாற்றிப் பதிவு செய்து, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று பயணிக்க வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து பிரசாந்தைக் கைது செய்தனா்.

ஒரே வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் ரௌடிகளின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து நடத்துநா் மா்மச்சாவு

திருச்சியில் ரயில் பாதை அருகே அரசுப்பேருந்து நடத்துநா் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தாா். திருச்சி தேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் த. பொன்னா் (45). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடம் கட்டித்தரக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை கட்டித்தர வலியுறுத்தி பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.காட்டுபுத்தூா் பேருராட்சியி... மேலும் பார்க்க

நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான முறையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா். திருச்சி ... மேலும் பார்க்க

பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 போ் கைது

வாழவந்தான்கோட்டை பூச்சொரிதல் நிகழ்வில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை அண்ணா காலனியில் முத்துமாரியம்மன் கோயில் உள்... மேலும் பார்க்க

காணாமல்போன 10 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

உப்பிலியபுரம் காவல் சரகத்தில் காணாமல்போன 10 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். துறையூா் அருகே வெங்கடாசலபுரம் லெ. நந்தகுமாா், ஒக்கரை சு. விஸ்வநாதன், கொப்பம்பட்டி ஜ... மேலும் பார்க்க