உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
கடைசி இன்னிங்ஸிலும் ஒரேமாதிரி ஆட்டமிழந்த கோலி..! போலண்ட் புதிய சாதனை!
சிட்னியில் நடைபெற்றுவரும் கடைசி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் விராட் கோலி அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி தான் விளையாடிய அனைத்து இன்னிங்ஸ்களிலும் அவுட் சைடு ஆஃப் பந்தில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக 5 இன்னிங்ஸில் 4 முறை ஸ்காட் போலண்ட் ஓவரில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்த பிறகு மிகவும் கோபமாக கத்திக்கொண்டு வெளியேறினார்.
தற்போது இந்திய அணி 17 ஓவர் முடிவில் 85/4 ரன்கள் எடுத்துள்ளது.
மோசமான பேட்டிங்
இந்தத் தொடரில் ஸ்காட் போலண்ட் வீசிய 68 பந்துகளில் விராட் கோலி 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 4 முறை ஆட்டமிழந்துள்ளார். தவறான ஷாட்டுகள் 35.2 சதவிகிதமாகவும் எட்ஜ்ஜில் 20.5 சதவிகிதமாகவும் இருக்கின்றன.
ஒரு தொடரில் கோலியை அதிக முறை வீழ்த்தியவர்கள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் -2014 (இங்கிலாந்தில்)
டாட் மர்ஃபி - 2023 (இந்தியாவில்)
ஸ்காட் போலண்ட் - 2024/25 (ஆஸ்திரேலியாவில்)